பரமக்குடி அரசு கல்லூரியில் அரசு தேர்வுக்கு இலவச பயிற்சி

பரமக்குடி,மார்ச் 22: பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பாக இலவச டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் சார்பாக, மாணவ,மாணவிகளுக்கு இலவச டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக தொடங்கியது.

இதனை கல்லூரி முதல்வர் மேகலா தொடங்கி வைத்தார். கல்லூரி வேலைவாய்ப்பு பயிற்சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கண்ணன் வரவேற்றார். துறைத் தலைவர்கள் சிவக்குமார் கணேசன், அறிவழகன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். இதனைத் தொடர்ந்து 88 மாணவ,மாணவிகள் பயிற்சிகளை பெற்றனர். இந்த பயிற்சியின் போது வேலை வாய்ப்பு, போட்டித் தேர்வுக்கு தயாராகும் முறைகள் குறித்து சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணி கணேஷ் எடுத்துரைத்தார்.

தினமும், பாடவாரியாக பேராசிரியர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்பட்டது. நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் மதன் பயிற்சி பெறும் மாணவ,மாணவிகளுக்கு கையேடுகள் மற்றும் புத்தகங்களை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் பயிற்சி பெறும் மாணவ,மாணவிகள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post பரமக்குடி அரசு கல்லூரியில் அரசு தேர்வுக்கு இலவச பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: