செலவின பார்வையாளர்களிடம் தேர்தல் தொடர்பான புகார் தெரிவிக்க செல்போன் எண்கள் அறிவிப்பு

 

ஊட்டி,மார்ச்22: தேர்தல் தொடர்பாக புகார்களை செலவின பார்வையாளர்களிடம் தெரிவிக்க செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கலெக்டர் அருணா கூறியிருப்பதாவது: எதிர்வரும் 19ம் தேதி அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு நாடாளுமன்ற பொது தேர்தல் பணிகள் சுமூகமாகவும்,நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு இந்திய தேர்தல் ஆணையம் நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு இரண்டு தேர்தல் செலவின பார்வையாளர்களை நியமனம் செய்துள்ளது.

இதன்படி ஊட்டி, கூடலூர், குன்னூர் ஆகிய தொகுதிகளுக்கு செலவின பார்வையாளராக கிரண் நியமிக்கப்பட்டுள்ளார்.பவானிசாகர், மேட்டுபாளையம், அவிநாசி ஆகிய தொகுதிகளுக்கு சந்தீப்குமார் மிஷ்ரா செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பொதுமக்கள் தேர்தல் விதிமீறல்கள் குறித்த புகார்களை நாள்தோறும் காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை ஊட்டியில் உள்ள தமிழகம் விருந்தினர் மாளிகையில் நேரில் சந்தித்து தெரிவிக்கலாம். மேலும் நீலகிரி தொகுதிக்குட்பட்ட தேர்தல் தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் தேர்தல் செலவின பார்வையாளர் கிரண் – 94899 30709, சந்தீப்குமார் மிஷ்ரா – 94899 30710 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

The post செலவின பார்வையாளர்களிடம் தேர்தல் தொடர்பான புகார் தெரிவிக்க செல்போன் எண்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: