விழுப்புரம் – திருவண்ணாமலைக்கு இரண்டு நாட்களுக்கு சிறப்பு ரயில்

விழுப்புரம், மார்ச் 20: பவுர்ணமி கிரிவலத்தையொட்டி திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பவுர்ணமி கிரிவலத்தையொட்டி திருவண்ணாமலைக்கு 24, 25ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து 24ம் தேதி காலை 9.15 மணிக்குப் புறப்படும் விழுப்புரம்-திருவண்ணாமலை சிறப்பு ரயில் (வ.எண்.06130) 11 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்துக்குச் சென்றடையும். எதிர்வழித்தடத்தில் 24ம்தேதி பிற்பகல் 12.40 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் திருவண்ணாமலை – விழுப்புரம் சிறப்பு ரயில் (வ.எண். 06129) 2.15 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு வந்தடையும்.விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து 24ம் தேதி இரவு 9.15 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் – திருவண்ணாமலை சிறப்பு ரயில் (வ.எண்.06131) அதே நாள் இரவு 10.45 மணிக்கு திருவண்ணாமலைக்கு வந்து சேரும்.எதிர்வழித்தடத்தில் திருவண்ணாமலையிலிருந்து 25ம் தேதி அதிகாலை 3.30 மணிக்குப் புறப்படும் திருவண்ணாமலை – விழுப்புரம் சிறப்பு ரயில் (வ.எண்.06132) காலை 5 மணிக்கு விழுப்புரம் வந்தடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post விழுப்புரம் – திருவண்ணாமலைக்கு இரண்டு நாட்களுக்கு சிறப்பு ரயில் appeared first on Dinakaran.

Related Stories: