குண்டர் சட்டத்தில் ரவுடி கைது

பண்ருட்டி, மார்ச் 20: பண்ருட்டியை அடுத்த பேர்பெரியான்குப்பத்தை சேர்ந்தவர் ஆனந்த் (23). இவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பைக்கில் வந்த 2 நபர்கள் அவரை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி ரூ.1500 பணத்தை பறித்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இது தொடர்பாக முத்தாண்டிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பலராமன் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு செடுத்தான்குப்பம் சுபாஷ் (எ) சுபாஷ் சந்திரபோஸ் (25), புலவன்குப்பம் கிங் ராஜா ஆகியோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட சுபாஷ் சந்திரபோஸ் மீது நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் ரவுடி பட்டியல் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் நெய்வேலி டவுன்ஷிப், முத்தாண்டிக்குப்பம், நெய்வேலி தெர்மல் ஆகிய காவல் நிலையங்களில் கொலை மிரட்டல், வழிப்பறி என 8 வழக்குகள் உள்ளன. இவரின் குற்றசெயலை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராம் பரிந்துரையின் பேரில் சுபாஷ் (எ) சுபாஷ் சந்திரபோசை ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் உத்தரவிட்டார்.

The post குண்டர் சட்டத்தில் ரவுடி கைது appeared first on Dinakaran.

Related Stories: