தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனை மக்களவை தேர்தல் எதிரொலி

பள்ளிகொண்டா, மார்ச் 19: மக்களவை தேர்தல் அறிவிக்கபட்டுள்ள நிலையில், வேலூர் மாவட்டத்தில் பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனை, கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதியை கடந்த 2 தினங்களுக்கு முன்பு அறிவித்தது. அதனையடுத்து உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் நாடுமுழுவதும் அமலானது. மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்கவும், முறைகேடுகளை தவிர்க்கவும் மாநிலம் முழுவதும் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் அமைக்கப்பட்ட்டுள்ளது.

இந்நிலையில், குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ள நிலை கண்காணிப்பு குழு தலைவர் சாந்தி தலைமையில் நேற்று பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டடனர். அப்போது, அந்த வழியாக வாகனங்களில் வியாபார நோக்கமாகவும், மற்ற பல்வேறு தேவைகளுக்காக எடுத்து செல்லப்பட்ட 50க்கும் மேற்பட்டோர் அதற்கான ஆவணங்கள் சரியாக இருந்ததால் அவர்களிடம் அந்த பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. மேலும், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் 6வழி தேசிய நெடுஞ்சாலையில் இந்த கண்காணிப்பு சோதனை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனை மக்களவை தேர்தல் எதிரொலி appeared first on Dinakaran.

Related Stories: