தூத்துக்குடி மக்களவை தொகுதி காங். பொறுப்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுடன் சந்திப்பு

ஏரல், மார்ச் 19: தூத்துக்குடி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளரும் தெற்கு மாவட்டத் தலைவருமான ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ, தெற்கு மாவட்ட திமுக செயலாளரான அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துப் பேசினார். நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் தொகுதி எம்எல்ஏ சண்முகையா, தி.மு.க. வர்த்தக அணி மாநில இணைச் செயலாளர் உமரிசங்கர், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ராமஜெயம், முன்னாள் தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஜெகன், மாவட்ட அயலக அணி ரகுராமன், வக்கீல் அணி செயலாளர் செல்வகுமார், காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவர்கள் ஜெயக்குமார், சுப்பிரமணியன், வக்கீல் சந்திரசேகர், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் காமராஜ், தெற்கு மாவட்ட துணைத்தலைவர் சங்கர், பொருளாளர் எடிசன் இளைஞர் காங்கிரஸ் தலைவர் இசை சங்கர், ஊடகப்பிரிவு முத்து மணி, இளைஞர் காங்கிரஸ் இசை சங்கர், வட்டாரத் தலைவர் ஜெயசீலன்துரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

The post தூத்துக்குடி மக்களவை தொகுதி காங். பொறுப்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுடன் சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: