பூஜை முடிவதற்குள் மின்விளக்குகள் நிறுத்தம்

சேலம், மே 17: சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் பள்ளியறை பூஜை முடிவதற்குள் மின்விளக்குகளை நிறுத்திவிடுவதாக, சேலம் மாவட்ட மதசார்பற்ற ஜனதாதள தலைவர் வேலாயுதம், தமிழக முதல்வருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வருக்கு அவர் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:சேலத்தில் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோயில் உள்ளது. கோயிலில் பள்ளி அறை பூஜை மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது. இந்த பள்ளியறை பூஜையை காண ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இரவில் பூஜை முடிவதற்கு முன்பாகவே கோயிலில் உள்ள மின்விளக்குகளை நிறுத்திவிடுகின்றனர். இதனால் பக்தர்கள் இருட்டில் தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக ஊழியர்களை கேட்டால் அவர்கள் சரிவர பதில் அளிப்பதில்லை. கோயிலில் போதிய கழிப்பிட வசதியில்லை.இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.

The post பூஜை முடிவதற்குள் மின்விளக்குகள் நிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: