மாணவர் சேர்க்கைக்கு 20ம்தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

தர்மபுரி, மே 17: தர்மபுரி அரசு கலைக்கல்லூரி முதல்வர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: சென்னை கல்லூரி கல்வி இயக்ககம் வழிகாட்டுதல்படி, தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2024 -2025ம் கல்வி ஆண்டில் இளநிலை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு, கடந்த 6ம் தேதி தொடங்கியது. மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த விண்ணப்ப பதிவு வரும் 20ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம். இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி www.tngasa.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

மேலும், தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் உள்ள சேர்க்கை உதவி மையம் மூலம், சேர்க்கை தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். ஒரே விண்ணப்பத்தில் விருப்பமுள்ள கல்லூரிகளுக்கும், பாடப்பிரிவுகளுக்கும் விண்ணப்பிக்கலாம். மேலும், முதலாம் ஆண்டு சேர்க்கைக்கான சிறப்பு ஒதுக்கீடு மாணாக்கர்களுக்கான கலந்தாய்வு (மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர், தேசிய மாணவர் படை மற்றும் பாதுகாப்புபடை வீரர்கள்) இம்மாதம் 28ம் தேதி முதல், 30ம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல் பொது கலந்தாய்வு வரும் ஜூன் 10ம் தேதி தொடங்கவுள்ளது. இவ்வாறு கல்லூரியின் முதல்வர் தெரிவித்துள்ளார்.

The post மாணவர் சேர்க்கைக்கு 20ம்தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: