வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

தர்மபுரி, மார்ச் 19: தர்மபுரியில், தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்டத்தின் சார்பில், வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இப்பேரணியை மகளிர் திட்ட இயக்குனர் பத்ஹூ முகம்மது நசீர் தொடங்கி வைத்து, வாக்காளர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த பேரணி தர்மபுரி நகராட்சி பூ மாலை வணிக வளாகத்தில் அமைந்துள்ள நகர்ப்புற வாழ்வாதார மையத்தில் தொடங்கி நான்கு ரோடு, மத்திய பேருந்து நிலையம், புறநகர் பேருந்து நிலையம் வழியாக மீண்டும் பூமாலை வணிக வளாகத்தை வந்து சேர்ந்தது. பேரணியில் 150க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு, 100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தி, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில், வாக்காளர் உறுதிமொழியான, மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம் என்று உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். இதில் உதவி திட்ட அலுவலர்கள் சஞ்சீவிகுமார், முருகேசன், வட்டார இயக்க மேலாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், சமுதாய அமைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post வாக்காளர் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: