பிரதமர் மோடியின் வருகையின்போது கோவை பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை: கோவையில் நேற்று பிரதமர் மோடி வருகையையொட்டி பலத்த சோதனை, முக்கிய இடங்களில் கண்காணிப்பு பணி நடந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் கோவை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், சிறிது நேரத்தில் வெடித்து சிதறும், முடிந்தால் வெடிகுண்டை கண்டுபிடியுங்கள் எனவும் கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்துவிட்டார். இதனால் அதிர்ந்துபோன போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அந்த பள்ளிக்கு விரைந்து சென்று அங்குள்ள அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து பாதுகாப்பு காரணம் கருதி அந்த பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. மதியம் பள்ளிக்கு வந்த பெற்றோர் தங்கள் குழந்தைகளை அழைத்து சென்றனர். ெவடிகுண்டு மிரட்டலால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. செல்போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க சைபர் பிரிவு போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

The post பிரதமர் மோடியின் வருகையின்போது கோவை பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Related Stories: