தன்னை சுற்றி சக்திவாய்ந்த பெண்கள் இருக்கிறார்கள்: பெண்களுக்கான சர்வதேச கருத்தரங்கை தொடங்கி வைத்து நடிகர் சூர்யா பெருமிதம்

சென்னை: பெண்கள் அங்கீகாரம் பெறுவதற்கு ஆண்களை விட 50 விழுக்காடு கூடுதலாக உழைக்கவேண்டியிருப்பதாக நடிகர் சூர்யா வருத்தம் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அகரம் அறக்கட்டளை சார்பில் பெண்களுக்கான இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கை நடிகர் சூர்யா தொடங்கி வைத்தார். அப்போது நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் தன்னை சுற்றி சக்தி வாய்ந்த பெண்கள் இருப்பதாக குறிப்பிட்டார்.

உலகம் முழுவதும் உயர்கல்வி ஆராய்ச்சி படிப்புகள் பெண்களின் பங்கு 30 விழுக்காடு குறைவாக இருப்பதாய் சுட்டிக்காட்டிய சூர்யா கண்டுபிடுப்புகளில் பெண்கள் முக்கிய பங்காற்றியும் ஆண்களே பெயர் பெறுவதாக தெரிவித்தார். உடல்வலிமை கொண்ட விளையாட்டுகளில் கூட பெண்கள் உயரத்தை தொடுவதாக சூர்யா பெருமிதம் தெரிவித்தார். தொடர்ந்து கல்லூரி மாணவிகளுடனும் உரையாற்றிய சூர்யா இந்திரா நூயி எழுதிய புத்தகத்தை கண்டிப்பாக வாங்கி படிக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். தற்போதைய சூழலில் பெண்கள் அங்கீகாரம் பெறுவதற்கு ஆணைகளை விட 50 சதவீதம் விழுக்காடு உழைக்கவேண்டி இருப்பதையும் சூர்யா குறிப்பிட்டு பேசினார்.

The post தன்னை சுற்றி சக்திவாய்ந்த பெண்கள் இருக்கிறார்கள்: பெண்களுக்கான சர்வதேச கருத்தரங்கை தொடங்கி வைத்து நடிகர் சூர்யா பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: