கணுக்காலில் 3 ஊசி…ஹர்திக் உருக்கம்

புதுடெல்லி: உலக கோப்பையின்போது ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமடைவதற்காக கணுக்காலில் 3 ஊசிகள் போட்டுக் கொண்டதுடன் ரத்தத்தையும் அகற்றியதாக ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா விளையாடிய 4வது லீக் ஆட்டத்தில் தனது முதல் ஓவரை வீசிய ஹர்திக், கணுக்காலில் காயம் அடைந்து வெளியேறினார்.

காயத்தின் தன்மை தீவிரமாக இருந்ததால், எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியதுடன் நீண்ட ஓய்வு எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். எதிர்வரும் ஐபிஎல் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக களமிறங்க உள்ள ஹர்திக், உலக கோப்பையில் தொடர்ந்து விளையாட வேண்டும் என்பதற்காக கடுமையாக முயற்சித்ததாகவும்… ஆனால், துரதிர்ஷ்டவசமாக தொடரில் இருந்தே விலக நேரிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கூறுகையில், ‘கணுக்காலில் வெவ்வேறு இடங்களில் 3 ஊசிகளை போட்டுக் கொண்டேன். வீக்கம் குறைவதற்காக ரத்தத்தை அகற்ற வேண்டி இருந்தது. அணிக்கு உதவ ஒரு சதவீத வாய்ப்பு இருந்தால் கூட அதை நழுவவிடக் கூடாது என்ற உறுதியுடன் கடுமையாக முயற்சித்தேன். இதனால் நீண்ட கால பாதிப்பு ஏற்படும் என்பதையும் உணர்ந்திருந்தேன். என்னால் நடக்கவே முடியாத நிலையில் ஓடுவதற்கு முயற்சி செய்தேன். ஆனாலும், எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை’ என்றார்.

The post கணுக்காலில் 3 ஊசி…ஹர்திக் உருக்கம் appeared first on Dinakaran.

Related Stories: