சாலப்பட்டியில் இடமாற்றம் செய்யப்பட்ட ரேஷன் கடை திறப்பு

 

முசிறி, மார்ச் 17: திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா வெள்ளூர் ஊராட்சி மூவேலியில் ரேஷன் கடை செயல்பட்டு வந்தது. இதில் சாலப்பட்டியைச் சேர்ந்த சுமார் 300 குடும்ப அட்டைதாரர்கள் மூவேலியில் பொருட்கள் வாங்கி வந்தனர். இவர்கள் சாலப்பட்டியிலேயே பொருட்கள் வாங்க கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சாலப்பட்டியில் ரேஷன் கடை இடம் மாற்றம் செய்யப்பட்டு புதிதாக துவங்கப்பட்டது. இதன் துவக்க விழாவிற்கு முசிறி திமுக ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்து புதிய ரேஷன் கடையை ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார். கூட்டுறவு சார் பதிவாளர் வெங்கடேசன், ஊராட்சி மன்ற தலைவர் வைதேகி வெங்கடேசன் மற்றும் திமுக நிர்வாகிகள் கார்த்திக், மூர்த்தி, கூட்டுறவு சங்க செயலாளர் சுந்தரராசு உள்ளிட்ட பலர் செய்திருந்தனர். விற்பனையாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.

The post சாலப்பட்டியில் இடமாற்றம் செய்யப்பட்ட ரேஷன் கடை திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: