பொதுப்பணித்துறையில் பணி நியமனம் பெற்ற பொறியாளர்களுக்கு பயிற்சி வகுப்பு: அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்

சென்னை: பொதுப்பணித்துறையில் பணி நியமனம் பெற்ற உதவி பொறியாளர்களுக்கான பயிற்சி வகுப்பை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார். சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில், பொதுப்பணித்துறையில் புதியதாக பணி நியமனம் பெற்ற 302 உதவி பொறியாளர்களுக்கு, பயிற்சி வகுப்பை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை செயலாளர் சந்தரமோகன், முதன்மை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, சென்னை மண்டல தலைமை பொறியாளர் ராஜசேகரன், மதுரை மண்டல தலைமை பொறியாளர் ரகுநாதன், கோவை மண்டல தலைமை பொறியாளர் காசிலிங்கம், திருச்சி மண்டல தலைமை பொறியாளர் வள்ளுவன், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்புத்துறை தலைமை பொறியாளர் அன்பரசன், இந்து சமய அறநிலையத்துறை தலைமை பொறியாளர் பெரியசாமி மற்றும் இதர பொறியாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக கட்டமைப்புகளை விரைவில் உருவாக்கும் ‘பிரி-பேப்ரிகேட்டடு’ கட்டுமான யுக்தி மூலம் சில வாரங்களில் வீடுகளை அழகாக உருவாக்கி குடியேற இயலும். இந்த பயிற்சி வகுப்பில் பங்கு பெற்றுள்ள உதவிப் பொறியாளர்கள் அனைவரும் இதுபோல காரணங்களை விரிவாக அறிந்து கொள்ளும்போதுதான், எதிர்காலத்தில் மேற்கொள்ளும் கட்டிட பணிகள் சிறப்பாக அமையும் என்றார்.

The post பொதுப்பணித்துறையில் பணி நியமனம் பெற்ற பொறியாளர்களுக்கு பயிற்சி வகுப்பு: அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: