நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதித்த சிறை தண்டனை ஐகோர்ட் நிறுத்திவைப்பு

சென்னை: பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவாக விமர்சனம் செய்யப்பட்ட பதிவை நடிகர் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதை தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் செயலாளர் மிதார் மொய்தீன் புகார் அளித்தார். அந்த புகாரின்படி, சென்னை மத்திய குற்றப் பிரிவினர் இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை எம்.பி., எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. சிறப்பு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கில் மறு உத்தரவு வரும்வரை நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். மேலும், மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

The post நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதித்த சிறை தண்டனை ஐகோர்ட் நிறுத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: