திருச்சி வண்ணத்துப்பூச்சி பூங்காவில் உலக வண்ணத்துப்பூச்சி தினம் கொண்டாட்டம்

 

திருச்சி, மார்ச் 15: திருச்சியில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவில் உலக வண்ணத்துப்பூச்சி தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. திருச்சி வனக்கோட்டம் வன உயிரினம் மற்றும் பூங்கா சரகத்திற்கு உட்பட்ட வண்ணத்துப்பூச்சி பூங்காவில் தலைமை வன பாதுகாவலர் சதீஷ் ஆலோசனையின்படி மாவட்ட வன அலுவலர் கிருத்திகா தலைமையில், உதவி வன பாதுகாவலர் சரவணகுமார் முன்னிலையில், வனச்சரக அலுவலர் சுப்பிரமணியம் மற்றும் சரக பணியாளர்கள் மேற்பார்வையில் உலக வண்ணத்துப்பூச்சி தினம் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி தமிழ்நாடு வனத்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு வண்ணத்துப்பூச்சியின் முக்கியத்துவம் குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் களி மண்ணால் ஆன மாதிரிகள், ஓவியப் போட்டி, கட்டுரைப்போட்டி, வினாடி வினா ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது.

திருச்சி மேலூர், ஸ்ரீரங்கம் பகுதிகளைச் சேர்ந்த இதில் நூற்றுக்கு மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் முதல் மூன்று இடம் பெற்றவர்களுக்கு பரிசுகளும், பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது. மேலும் வருகை தந்த மாணவ, மாணவிகள், பெற்றோர்களுக்கு பசுமைப் புரட்சியை உருவாக்கும் வகையில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக பறவைகள் ஆர்வலர் மகேஷ் கலந்து கொண்டார்.

The post திருச்சி வண்ணத்துப்பூச்சி பூங்காவில் உலக வண்ணத்துப்பூச்சி தினம் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: