மாநிலங்களவை எம்பியாக சுதா மூர்த்தி பதவியேற்பு

புதுடெல்லி: இன்போசிஸ் நிறுவனரான நாராயணமூர்த்தியின் மனைவியும், இன்போசிஸ் பவுன்டேஷன் முன்னாள் தலைவருமான சுதா மூர்த்தி(73). சர்வதேச மகளிர் தினத்தன்று சுதா மூர்த்தி மாநிலங்களவை எம்பியாக நியமனம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து நேற்று சுதா மூர்த்தி மாநிலங்களவை எம்பியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

The post மாநிலங்களவை எம்பியாக சுதா மூர்த்தி பதவியேற்பு appeared first on Dinakaran.

Related Stories: