கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் சிறுத்தை, கருஞ்சிறுத்தை நடமாட்டம்

கோத்தகிரி: கோத்தகிரி அருகே குடியிருப்பு புகுதியில் சிறுத்தை, கருஞ்சிறுத்தை நடமாடியது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் சுற்று வட்டாரங்களில் சிறுத்தை அடிக்கடி நடமாடி வருகிறது. இந்த நிலையில் கோத்தகிரி அருகே உள்ள பாப்திஸ்த்து காலனியில் நேற்று இரவு சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தை உலா வந்தது. மேலும் ஒரு வீட்டின் பின்பக்க கேட் மற்றும் சுற்றுச் சுவரின் மீது ஏறிய சிறுத்தை அப்பகுதியை நோட்டமிட்டுள்ளது. சிறிது நேரம் கழித்து அங்கிருந்து சென்றது.

இந்த காட்சி குடியிருப்புகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதை பார்வையிட்ட குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சி அடைந்தனர். வனத்தை விட்டு வெளியேறிய சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தையால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைக்கு இரவில் வீடுகளை விட்டு வெளியே வர பெரிதும் அச்சமடைந்துள்ளனர். எனவே, குடியிருப்பு பகுதியில் நடமாடும் சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தையினை கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து அடர் வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் சிறுத்தை, கருஞ்சிறுத்தை நடமாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: