மெட்ரோ ரயில் பணி காரணமாக நாளை முதல் ஆயிரம்விளக்கு ஒயிட்ஸ் சாலையில் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம்: மாநகர போக்குவரத்து போலீஸ் அறிவிப்பு

சென்னை, மார்ச் 14: மெட்ரோ ரயில் பணி காரணமாக ஆயிரம்விளக்கு ஒயிட்ஸ் சாலையில் நாளை முதல் ஓராண்டு காலத்திற்கு போக்குவரத்து மாற்றம் ெசய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை ஒயிட்ஸ் சாலையில் உள்ள ஆயிரம் விளக்கு பகுதியில் மெட்ரோ ரயில் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளை கருத்தில் கொண்டு, போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சென்னை போக்குவரத்து காவல்துறையினரால் நாளை முதல் வரும் 14.3.2025ம் ஆண்டு வரை ஓராண்டு காலத்திற்கு பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:
 பட்டுல்லா சாலை -ஒயிட்ஸ் சாலை சந்திப்பிலிருந்து ஒயிட்ஸ் சாலை- திருவிக சந்திப்பு வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.
 ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருந்து அண்ணா சாலை நோக்கி ஒயிட்ஸ் சாலை வரும் வாகனங்கள் பட்டுல்லாஸ் சாலை- ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் திரும்பி தங்களது இலக்கை அடையலாம்.
 அண்ணா சாலையிலிருந்து ஸ்மித் சாலையில் வரும் வாகனங்கள் ஸ்மித் ரோடு- ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.
 அண்ணா சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஒயிட்ஸ் சாலை – திருவிக சந்திப்பில் இருந்து பட்டுல்லாஸ் சாலை – ஒயிட்ஸ் சாலை சந்திப்பு வரை வழக்கம் போல் இயக்கப்பட்டு ராயப்பேட்டை மணிக்கூண்டிற்கு ெசன்றடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மெட்ரோ ரயில் பணி காரணமாக நாளை முதல் ஆயிரம்விளக்கு ஒயிட்ஸ் சாலையில் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம்: மாநகர போக்குவரத்து போலீஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: