குஜராத்தில் ரூ.480 கோடிக்கு போதைப் பொருள் பறிமுதல் இந்த லட்சணத்தில் தமிழகத்தை குறை சொல்வதா? அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி

சென்னை: தமிழகத்தை குறை சொல்லும் அண்ணாமலை, பாஜ ஆளும் மாநிலத்தில் ரூ.480 கோடிக்கு போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதே, அதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார் என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பேசியதாவது: அதிமுக ஆட்சியின் போது, சட்டம் ஒழுங்கு பேணிகாக்கப்பட்டு பொதுமக்கள், குறிப்பாக சிறுபான்மையின மக்கள் அச்சமின்றி பாதுகாப்புடன் வாழ்ந்தார்கள். இஸ்லாமியர்களுக்கு அரணாக இருப்பது நாம்தான். சிறுபான்மையினர் மீது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காட்டிய அக்கறையை இஸ்லாமிய சமுதாயத்தின் மீது காட்டிய அன்பை, பாசத்தை கொஞ்சம்கூட குறையாமல் நாங்களும் காட்டுவோம் என்ற கூறி, 30 நாட்கள் நோன்பு முடிந்து, வர இருக்கின்ற ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பண்டிகை, உங்கள் அனைவருக்கும் சீரும் சிறப்புமாக, ஏற்றமும், இன்பமும், மன அமைதியும் வழங்க, எல்லாம் வல்ல அல்லாவிடம் துவா செய்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் நிருபர்கள், எடப்பாடி பழனிச்சாமியிடம் அதிமுக ஆட்சியில் இருந்தபோது போதைப் பொருள் விற்பனை செய்யப்பட்டது. டாஸ்மாக் கடைகள் அதிமுக ஆட்சியில் தொடர்ந்து திறக்கப்பட்டதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளாரே என்று கேட்டபோது, ‘நாங்க ஆட்சி செய்யும்போது புகார் வரலை. வந்தா தெரிஞ்சிருக்கும். அப்படிப் பார்த்தா அவங்க (பாஜ) ஆளுகிற மாநிலங்கள் முழுவதும் அப்படித்தான் உள்ளது. இன்னைக்கு கூட அவங்க ஆளுகிற மாநிலத்தில் ரூ.480 கோடி போதைப் பொருள் பிடிச்சிருக்காகங்க அதுக்கு என்ன பதில் சொல்லப் போறாராம் என்று கேட்டார்.

The post குஜராத்தில் ரூ.480 கோடிக்கு போதைப் பொருள் பறிமுதல் இந்த லட்சணத்தில் தமிழகத்தை குறை சொல்வதா? அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி appeared first on Dinakaran.

Related Stories: