திருமங்கலம் கிராமத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்த பண்ணை பள்ளி

*வேளாண்மை கல்லூரி மாணவர்கள் செயல் விளக்கம்

லால்குடி : லால்குடி அருகே திருமங்கலம் கிராமத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் பற்றிய பண்ணைப்பள்ளி நடந்தது. வேளாண்மை கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காட்டினர்.திருச்சி மாவட்டம் வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ் லால்குடி வட்டாரம் திருமங்கலம் கிராமத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் பற்றிய பண்ணை பள்ளி நடைபெற்றது பண்ணைப் பள்ளியில் லால்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுகுமார் அவர்கள் பேசுகையில் பாரம்பரிய நெல் ரகங்கள் முக்கியத்துவங்கள் குறித்து விரிவாக விளக்கி கூறினார்.

மேலும் ஆலங்குடி மகாஜனம் கிராமத்தில் வேளாண்மை விவசாயி இளங்கோவன் கலந்து கொண்டு அங்கக வேளாண்மையில் பாரம்பரிய நெல் ரகங்கள் மாப்பிள்ளை சம்பா கருப்பு கவுணி, தங்க சம்பா, இலுப்பை பூ சம்பா, காட்டுயாணம், தூய மல்லி, ரத்தசாலி, அன்ன மிளகி, ஆத்தூர் கிச்சடி சம்பா போன்ற ரகங்கள் தேர்வு சாகுபடி தொழில் நுட்பங்கள் பற்றியும் இயற்கை இடுபொருட்கள், மீன் அமிலம் போன்றவற்றை பயன்படுத்தி பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி விரிவாக விளக்கி கூறினார்.

வேளாண்மை உதவி அலுவலர் ராமசுந்தரம் வேளாண்மை துறையில் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் பற்றி விரிவாக விளக்கிக் கூறியும் மண் ஆய்வின் அடிப்படையில் உரமிடுதல் பற்றியும், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் பற்றி விரிவாக விளக்கி கூறினார் மேலும் பெரம்பலூர் தந்தை ரோவர் வேளாண்மை கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள்பெரம்பலூர் தந்தை ரோவர் வேளாண் கல்லூரி மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனம் இறுதி ஆண்டு மாணவிகள் ஷிபான பர்வீன், சிவரஞ்சனி, சௌமியா, ஸ்ரீமதி ,சினேகா, ஸ்ரீ சஞ்சனா, சுருதி, சுபாஷினி, சுஜிதா கலந்து கொண்டு பாரம்பரிய நெல் ரகங்கள் முக்கியத்துவம் மற்றும் மருத்துவ குணங்கள் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக விளக்கினர்.

இதற்கான ஏற்பாட்டினை முன்னோடி விவசாயிகள் ராஜகோபால், சரஸ்வதி, அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் கார்த்திக், தமிழ்மணி ஆகியோர் செய்திருந்தனர். இப்பண்ணை பள்ளியில் 25க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

The post திருமங்கலம் கிராமத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்த பண்ணை பள்ளி appeared first on Dinakaran.

Related Stories: