வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஆய்வு கூட்டம்

 

குளித்தலை, மார்ச் 13: குளித்தலை அண்ணா சமுதாய மன்றத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 137 குளித்தலை சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் மேற்பார்வை அலுவலர்களுக்கான தேர்தல் தொடர்பான ஆய்வு கூட்டம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், குளித்தலை வருவாய்கோட்டாட்சியர் தனலட்சுமி தலைமையில் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் மேற்பார்வை அலுவலர்கள் வரும் பாராளுமன்றத் தேர்தலில் வாக்கு சாவடி மையங்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து இதுகுறித்து தெரிந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டு பரிசுகள் வழங்குவதாகவும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கூறினார். தொடர்ந்து ஆய்வுக் கட்டத்தில் தனித்துணை தாசில்தார் தேர்தல் வைரப்பெருமாள், குளித்தலை தாசில்தார் மற்றும் கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரின் நேர்முக உதவியாளர் மகுடேஸ்வரன் மற்றும் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 270 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் 24 மேற்பார்வை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஆய்வு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: