அரசின் சாதனை விளக்க கண்காட்சி அமைச்சர் திறந்து வைத்தார்

 

சிவகங்கை, மார்ச் 12: சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாக சமுதாய கூடத்தில் முதலமைச்சரின் இரண்டரை ஆண்டு சாதனை விளக்க சிறப்பு புகைப்படக் கண்காட்சி நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஆஷாஅஜித் தலைமை வகித்தார். கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் கண்காட்சி அரங்கை திறந்து வைத்தார். முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த இரண்டரை ஆண்டுகளில் ஏராளமான மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் மற்றும் முடிவுற்ற பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தல் மற்றும் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் தொடர்பான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ள. தமிழக அரசின் சாதனை விளக்க சிறப்புப் புகைப்படக் கண்காட்சியை ஏராளமான மக்கள் பார்வையிடும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்தது. இக்கண்காட்சியில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில், பல்வேறு திட்டங்கள் குறித்த செயல் விளக்க கண்காட்சியும் அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில் மாவ ட்ட எஸ்பி டோங்கரேபிரவின் உமேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், துணை இயக்குநர் விஜய்சந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராஜசெல்வன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் முத்துமாரியப்பன், சிவகங்கை ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் மஞ்சுளா பாலசந்தர், சிவகங்கை நகர்மன்ற துணைத் தலைவர் கார்கண்ணன், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து, பல்வேறு துறை அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post அரசின் சாதனை விளக்க கண்காட்சி அமைச்சர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: