அச்சிறுப்பாக்கத்தில் ரூ.20 லட்சத்தில் அங்கன்வாடி, பயணியர் நிழற்குடை: எம்எல்ஏ, எம்பி திறந்து வைத்தனர்

 

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு ஜின்னா நகர் பகுதியில் பல ஆண்டுகளாக இடிந்த கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. இந்த கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி கவுன்சிலர் தாவூத் பீ உசேன், காஞ்சிபுரம் எம்பி செல்வத்திடம் மனு அளித்திருந்தார்.

அதன்பேரில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.10.11 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. அதில், பேரூராட்சி தலைவர் நந்தினி கரிகாலன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு பெருந்தலைவர் கண்ணன், துணைத்தலைவர் எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மன்ற உறுப்பினர் தாவூத் பீ உசேன் அனைவரையும் வரவேற்றார்.

இதில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்பி செல்வம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறந்து வைத்தனர். இதனைத்தொடர்ந்து, திருமுக்காடு ஊராட்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட பேருந்து நிறுத்த நிழற்குடையை சுந்தர் எம்எல்ஏ திறந்து வைத்தார். இதில், மாவட்ட கவுன்சிலர்கள் மாலதி, வசந்தா, மாவட்ட துணை செயலாளர் கோகுலக்கண்ணன், ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

The post அச்சிறுப்பாக்கத்தில் ரூ.20 லட்சத்தில் அங்கன்வாடி, பயணியர் நிழற்குடை: எம்எல்ஏ, எம்பி திறந்து வைத்தனர் appeared first on Dinakaran.

Related Stories: