விருதுநகர் மேல்நிலை பள்ளியில் ரூ.2.14 கோடியில் புதிய கட்டிட பணி: அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்

 

விருதுநகர், மார்ச் 11: விருதுநகரில் ரூ.2.14 கோடி மதிப்பிலான புதிய வகுப்பறைகள் கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி, ரூ.2.93 கோடி மதிப்பில் 6 இடங்களில் கட்டப்பட்டுள்ள புதிய கால்நடை மருந்தக கட்டிடங்களை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு திறந்து வைத்தனர். விருதுநகர் சுப்பையா நாடார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் ரூ.2.14 கோடி மதிப்பில், 10 புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கு அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டினர்.

மேலும் கால்நடை துறையின் சார்பில் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் சேத்தூர் மற்றும் எஸ்.ராமலிங்கபுரம் கிராமங்களில் தலா ரூ.54 லட்சம் மதிப்பிலும், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சிப்பிப்பாறை கிராமத்தில் ரூ.48.35 லட்சம் மதிப்பிலும், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் டி.மம்சாபுரம் கிராமத்தில் ரூ.40.50 லட்சம் மதிப்பிலும், சிவகாசி ஊராட்சி ஒன்றியம் சாமி நத்தம் கிராமத்தில் ரூ.48.35 லட்சம் மதிப்பிலும்,

சிவகாசி ஊராட்சி ஒன்றியம் செங்கமல நாச்சியார்புரம் கிராமத்தில் ரூ.48.35 லட்சம் மதிப்பில் என மொத்தம் 6 இடங்களில் ரூ.2.95 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கால்நடை மருந்தகங்களையும் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் தியோபிலஸ் ரோஜர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அழகர்சாமி, உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post விருதுநகர் மேல்நிலை பள்ளியில் ரூ.2.14 கோடியில் புதிய கட்டிட பணி: அமைச்சர்கள் துவக்கி வைத்தனர் appeared first on Dinakaran.

Related Stories: