கருங்கல்பாளையம் அரசு நூலகத்தில் மகளிர் தின விழா கொண்டாட்டம்

 

ஈரோடு, மார்ச் 11: ஈரோடு கருங்கல்பாளையம் மகாகவி பாரதி நினைவு அரசு நூலக்தில் உலக மகளிர் தினத்தையொட்டி கருத்தரங்கம், பட்டிமன்றம் மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது. 40வது வார்டு கவுன்சிலர் ரமேஷ்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட நூலக அலுவலர் யுவராஜ் பங்கேற்று பேசினார். இதில், தமிழ் சிந்தனை பேரவையின் தலைவர் ரமேஷ்குமார் பங்கேற்று மென்மையும், மேன்மையும் என்ற தலைப்பில் பேசினார்.

பெண்மையை போற்றுவதில் விஞ்சி நிற்பவர்கள் ஆண்களா, பெண்களா என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. இதில், கல்வியாளர்கள் உஷாராணி, அரசு ஆசிரியை ரமாபிரியா, சேலம் தங்கராஜ், சமூக ஆர்வர் ராஜராமேஸ்வரி, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கமலசேகரன், வழக்கறிஞர் சிவகுமார், ஓய்வு பெற்ற ஆசியர் சவுரிராஜன், சமூக ஆர்வலர் அழகுராஜன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

தொடர்ந்து தமிழ் மொழி, ஆன்மீகம், ஜோதிடம் இலக்கிய துறைகளில் சிறந்து விளங்கியதற்காக ஸ்ரீசவுரிராஜனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், அரசு பள்ளியில் படித்து சென்னை ஹோமியோபதி மருத்துவம் படிக்கும் மாணவி தாரண்யாவிற்கு இளம் சாதனையாளர் விருது தமிழ் சிந்தனை பேரவை சார்பில் வழங்கப்பட்டது.

முன்னதாக கருங்கல்பாளையம் நூலக வாசகர் வட்ட தலைவர் சந்திரசேகர் வரவேற்றார். முடிவில், கருங்கல்பாளையம் நூலகத்தின் ஷர்மிளா நன்றி கூறினார். நிகழ்ச்சியில், சமூக ஆர்வலர்கள் பாலசுப்ரமணியம், ரவீந்திரன், கொல்லம்பாளையம் நூலக வாசகர் வட்ட தலைவர் சண்முகசுந்தரம், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கருங்கல்பாளையம் அரசு நூலகத்தில் மகளிர் தின விழா கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: