திண்டுக்கல், மார்ச் 11: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மகளிர் தின மாநில கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் மணிமேகலை தலைமை வகித்தார். செயலாளர் பிரசன்னா வரவேற்றார். பொதுச் செயலாளர் மயில் தொடக்க உரை நிகழ்த்தினார். மாநில பொருளாளர் மத்தேயு, துணைப் பொதுச் செயலாளர் கணேசன் வாழ்த்திப் பேசினர்.
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழிய சங்க இணைச் செயலாளர் கிரிஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். கூட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கருத்தரங்கில், அனைத்து பள்ளிகளிலும் புகார் கமிட்டி அமைக்க வேண்டும், அதனை அரசு கண்காணிக்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். உட்பட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாநில செயலாளர் சகிலா நன்றி கூறினார்.
The post மகளிர் தின மாநில கருத்தரங்கு appeared first on Dinakaran.