இன்போசிஸ் நிறுவனர் மனைவிக்கு எம்பி பதவி: மோடி வாழ்த்து

புதுடெல்லி: மகளிர் தினத்தன்று மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்ட அறிவிப்பு இரட்டிப்பு மகிழ்ச்சி என சுதா மூர்த்தி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் மொத்தம் 245 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 12 உறுப்பினர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்றனர். அதன்படி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்ட நேற்று கல்வியாளரும், எழுத்தாளருமான சுதா மூர்த்தியை மாநிலங்களவை உறுப்பினராக ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்துள்ளார். இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியான சுதா மூர்த்தி, மூர்த்தி அறக்கட்டளை தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார் பல்வேறு நூல்களை எழுதியுள்ள சுதா மூர்த்தி, 2006ம் ஆண்டில் பத்ம விருதும், கடந்த ஆண்டு பத்ம பூஷன் விருதுகளை பெற்றுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தன் ட்விட்டர் பதிவில், “சுதா மூர்த்தியை மாநிலங்களவை உறுப்பினராக ஜனாதிபதி முர்மு நியமித்தது குறித்து நான் மகிழ்சசி அடைகிறேன். மாநிலங்களவையில் அவரது வரவு மகளிர் சக்திக்கு சிறந்த சான்றாகும்” என்று பதிவிட்டுள்ளார்.

The post இன்போசிஸ் நிறுவனர் மனைவிக்கு எம்பி பதவி: மோடி வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: