ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 3 அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது

 

ஈரோடு,மார்ச்8: தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை மூலம் அரசு பள்ளிகளில் சிறப்பாக செயல்படும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கப்படுகிறது. அதன்படி பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தலைமை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த விருது வழங்கப்படுகின்றது. தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் 100 தலைமையாசிரிகளுக்கு அறிஞர் அண்ணா விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதன்படிஈரோடு எஸ்கேசி ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சுமதி,பெருந்துறை ஒன்றியம் என். கந்தம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கந்தசாமி, மொடக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை லலிதா ஆகிய 3 தலைமை ஆசிரியர்களுக்கு திருச்சியில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி விருதும், பள்ளி மேம்பாட்டுக்காக ஊக்கத்தொகையாக தலா ரூ.10 லட்சமும் வழங்கி கவுரவித்தார். விருது பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சம்பத் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

The post ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 3 அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது appeared first on Dinakaran.

Related Stories: