வாய்க்கால் பாலத்தில் தடுப்பு அமைக்க கோரிக்கை

ஈரோடு, டிச. 27: ஈரோடு திண்டலில் இருந்து, பழனிக்கவுண்டன்பாளையம் வழியாக ரிங்ரோடு செல்லும் இணைப்புச்சாலை உள்ளது. இந்த சாலையில், தெற்குபள்ளம் பகுதியில் ஓடையை கடந்து செல்ல பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகள் இல்லாமல் சிறிய கான்கிரீட் தூண்கள் மட்டும் உள்ளன. அதிலும் பாதிக்கும் மேற்பட்ட தூண்கள் உடைந்து எவ்வித தடுப்புகளும் இல்லாமல் உள்ளது.

இந்த பாலத்தின் அருகிலேயே தனியார் பள்ளி செயல்பட்டு வருவதால் தினமும் நூற்றுக்கணக்கான பள்ளி வாகனங்கள், கார், ஆட்டோ, லாரிகள், இருசக்கர வாகனங்கள் இந்த பாலத்தின் வழியாக சென்று வருகின்றன. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படும் முன்னர் இந்த பாலத்தில் தடுப்புகள் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related Stories: