அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.5.85 லட்சத்துக்கு வேளாண் விளை பொருட்கள் ஏலம்

அந்தியூர்,டிச.30: ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை விவசாய விளை பொருட்கள் ஏலம் நடைபெறும். நேற்று நடந்த ஏலத்தில் 6 ஆயிரத்து 179 தேங்காய்கள் விற்பனைக்கு வந்திருந்தது. இதில் தேங்காய் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.43 முதல் அதிகபட்சம் ரூ.51.20 வரை ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 844க்கு விற்றது. தேங்காய் பருப்பு 63 மூட்டைகள் வந்ததில் கிலோ ஒன்று குறைந்தபட்சம் ரூ.166.71 முதல் அதிகபட்சம் ரூ.212.79 வரை ரூ.3 லட்சத்து 70 ஆயிரத்து 784க்கு ஏலம் போனது. எள் 8 மூட்டைகள் கிலோ ஒன்று குறைந்தபட்சம் ரூ.113.91 முதல் அதிகபட்சம் ரூ.145.92 வரை ரூ.71 ஆயிரத்து 774க்கு விற்றது.

உளுந்து கிலோ ஒன்று குறைந்தபட்சம் ரூ.42.29 முதல் அதிகபட்சம் ரூ.58.79 வரை ரூ.1395க்கு ஏலம் போனது. பச்சைப்பயிறு 3 மூட்டைகள் ஏல விற்பனைக்கு வந்ததில், கிலோ ஒன்று குறைந்தபட்சம் ரூ.94.09 முதல் அதிகபட்சம் ரூ.94.09 வரை ரூ.27 ஆயிரத்து 286க்கு விற்றது. நேற்று நடந்த ஏல விற்பனையில் மொத்தம் ரூ.5 லட்சத்து 85 ஆயிரத்து 54 விவசாய விளை பொருட்கள் ஏலம் போயின. இதனை அந்தியூர், பவானி, ஈரோடு, திருப்பூர், கோவை,கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.

Related Stories: