ஈரோடு, டிச. 27: ஈரோடு பேருந்து நுழைவு பகுதியில் சாக்கடை குழியை மறைக்க வைக்கப்பட்டுள்ள தடுப்புகளால் இடையூறு ஏற்பட்டு பேருந்து ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகி வருகிறனர். ஈரோடு பேருந்து நிலையத்தின் மேற்கு பகுதியில் உள்ள மேட்டூர் ரோடு நுழைவு பாதை வழியாக தினம் ஏராளமான பேருந்துகள் வருகின்றன. மற்ற 3 வழிகளைவிட மிகவும் விசாலமானது இந்த பாதை. பேருந்து நிலையத்துக்குள், பேருந்துகள் நுழைய மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள இந்த வழியில், நுழைவு பாதையின் நடுவில் சாக்கடை கல்வாய் மீது போடப்பட்டுள்ள கான்கிரீட் உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதை மறைக்கும் வகையில் இரும்புத் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், அந்த வழியாக வரும் பேருந்துள் பேருந்து நிலையத்திற்குள் செல்ல சிரமமாக உள்ளது என ஓட்டுனர்கள் புகார் தெரிவித்தனர். எனவே, அந்த இடத்தில் உடைந்துள்ள கான்கிரீட் பகுதியை சீரமைத்து, இரும்பு தடுப்புகளையும் அகற்றி பேருந்துகளை சிரமமின்றி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
