திருத்தணி முருகன் கோயிலில் 32 நாட்களில் பக்தர்கள் காணிக்கை ₹1.38 கோடி, 982 கிராம் தங்கம்: கோவில் நிர்வாகம் தகவல்

திருவள்ளூர், மார்ச் 7: திருத்தணியில் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கும் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி என பல்வேறு மாநிலங்களில் இருந்து முருகப்பெருமானை வழிபட்டு செல்கின்றனர். பின்னர் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற காணிக்கையாக மலை கோயிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்களில் பணம், நகை பொருட்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இந்நிலையில் கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் சு.தரன், இணை ஆணையரும், செயல் அலுவலருமான க.ரமணி, அறங்காவலர்கள் உஷா ரவி, கோ.மோகனன், வி.சுரேஷ்பாபு, மு.நாகன் மற்றும் கோயில் அலுவலர்கள் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு தேவர் மண்டபத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்த பகுதியில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

அப்போது 100க்கும் மேற்பட்ட திருக்கோயில் ஊழியர்கள் கலந்து கொண்டு காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி 32 நாட்களில் பக்தர்கள் உண்டியல் செலுத்திய காணிக்கையாக ₹1 கோடியே 38 லட்சத்து 46 ஆயிரத்து 698 பணம், 982 கிராம் தங்கம், 9 கிலோ 18 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக செலுத்தியிருந்ததாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர். கடந்த மாதம் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக ₹1 கோடியே 32 லட்சத்து 82 ஆயிரத்து 988, 721 கிராம் தங்கம், 8 கிலோ 704 கிராம் வெள்ளி ஆகியவற்றை செலுத்தியிருந்தனர். கடந்த மாதத்தை விட இந்த மாதம் ₹ 5 லட்சத்து 63 ஆயிரத்து 710 ம், 261 கிராம் தங்கம், 476 கிராம் வெள்ளி பக்தர்கள் கூடுதலாக உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post திருத்தணி முருகன் கோயிலில் 32 நாட்களில் பக்தர்கள் காணிக்கை ₹1.38 கோடி, 982 கிராம் தங்கம்: கோவில் நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: