15 மாகாணங்களில் டிரம்ப் வெற்றி; அமெரிக்க அதிபர் தேர்தல்: விலகினார் நிக்கி ஹாலே

நியூயார்க்:அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான வாக்கெடுப்பில் 15 மாகாணங்களில் தோல்வி ஏற்பட்டதையடுத்து போட்டியில் இருந்து விலகுவதாக நிக்கி ஹாலே நேற்று அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் இந்தாண்டு நடக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக நிற்கப்போவது யார் என்பதற்கான தேர்தல் அந்த கட்சி சார்பில் நடத்தப்பட்டது.

முன்னாள் அதிபர் டிரம்ப், இந்திய வம்சாவளியும், ஐநாவுக்கான முன்னாள் துாதருமான நிக்கி ஹாலே ஆகியோருக்கு இடையே நேரடி போட்டி நிலவியது. 15 மாகாணங்களில் டிரம்ப் வெற்றிபெற்றார்.

வெர்மோன்ட் மாகாணத்தில் மட்டும்தான் நிக்கி வெற்றிபெற்றார். இதையடுத்து நிக்கி ஹாலே தனது பிரசாரத்தை ரத்து செய்து விட்டு போட்டியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். எனவே வரும் தேர்தலிலும் அதிபர் பதவிக்கான போட்டியில் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆகியோரே மீண்டும் மோதுகின்றனர்.

The post 15 மாகாணங்களில் டிரம்ப் வெற்றி; அமெரிக்க அதிபர் தேர்தல்: விலகினார் நிக்கி ஹாலே appeared first on Dinakaran.

Related Stories: