தேனி அல்லது ராமநாதபுரத்தில் போட்டி?.. அதிமுக கூட்டணியில் இணைந்தது அகில இந்திய ஃபார்வட் பிளாக் கட்சி

சென்னை: அதிமுக கூட்டணியில் அகில இந்திய ஃபார்வட் பிளாக் கட்சி இணைந்தது. நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் ஒரு சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தல் கூட்டணி குறித்து பேசுவதில் மும்முரம் காட்டி வருகிறார்கள். அதிமுகவை பொறுத்தவரை தற்போது வரை யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனாலும், பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து அதிமுக சார்பில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் அகில இந்திய ஃபார்வட் பிளாக் கட்சி இணைந்தது. தேனி, ராமநாதபுரம் தொகுதியில் ஏதேனும் ஒரு தொகுதியை கேட்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கிரீன்வேஸ்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் பார்வர்டு பிளாக் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சந்தித்து பேசினார்.

கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து இரு கட்சியும் முதற்கட்ட ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கதிரவன்; பாஜக இம்முறை தோல்வியை சந்திக்கும். தமிழகத்தில் ஃபார்வட் பிளாக் கட்சி அதிமுக கூட்டணியில் உள்ளது. அதிமுக கூட்டணியில் ஒரு தொகுதி கேட்டுள்ளோம் இவ்வாறு கூறினார்.

The post தேனி அல்லது ராமநாதபுரத்தில் போட்டி?.. அதிமுக கூட்டணியில் இணைந்தது அகில இந்திய ஃபார்வட் பிளாக் கட்சி appeared first on Dinakaran.

Related Stories: