தா.பழூர், மார்ச் 5: அரியலூர் மாவட்டம் தா.பழூர் கடைவீதியில் உள்ள தடுப்பு சுவர் மற்றும் வேகத்தடைகளில் வர்ணம் பூசும் பணி நடைபெற்றது. இதில் வாகன விபத்துகளை தடுக்கும் பொருட்டும், வேகத்தடை மற்றும் தடுப்பு சுவர்களை வாகன ஓட்டிகளுக்கு காட்டும் விதமாக வர்ணம் தீட்டும் பணி நடைபெற்றது.
அரியலூர் கோட்ட பொறியாளர் உத்தாண்டி அறிவுறுத்தலின் படி, ஜெயங்கொண்டம் உதவி கோட்ட பொறியாளர் கருணாநிதி, உதவி பொறியாளர் விக்னேஷ் ராஜ் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் சாலை ஆய்வாளர் சுஜாதா மற்றும் சாலை பணியாளர்கள் மூலம் வண்ணம் தீட்டும் பணி நடைபெற்றது.
இந்த பணி ஜெயங்கொண்டம் – கும்பகோணம் செல்லும் சாலையில் தா.பழூர் வரை உள்ள வேகத்தடை மற்றும் தடுப்புச் சுவர்களில் வர்ணம் தீட்டப்பட்டது. அவ்வப்போது பெய்த மழையின் காரணமாகவும், பனி மற்றும் கனரக வாகனங்கள் செல்வதன் காரணமாகவும் சாலையில் உள்ள வேகத்தடை தெரியாத வகையில் வண்ணம் அழிந்து காணப்பட்டது.
இதனை சரி செய்யும் பொருட்டு சாலை பணியாளர்கள் வெள்ளை வண்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டனர். இதன் மூலம் இரவு நேரங்களில் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பான முறையில் பயணம் செய்யலாம்.
விபத்துக்கள் தடுக்கும் பொருட்டு சாலை பணியாளர்கள் மூலம் வண்ணம் தீட்டும் பணி நடைபெற்றது.
The post தா.பழூர் பகுதி சாலையில் வேகத்தடைகளில் வர்ணம் பூசும் பணி appeared first on Dinakaran.