கும்மிடிப்பூண்டி அருகே ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த மாநெல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் 106வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர் சஞ்ஜெய் காந்தி தலைமையில் நடந்தது. இந்த விழாவிற்கு ஒன்றியக்குழு துணைத் தலைவர் மாலதி குணசேகரன், டிஜெஎஸ் கல்வி குழும இயக்குனர் தமிழரசன், மாநெல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் லாரன்ஸ், மாவட்ட கவுன்சிலர் சாரதம்மா முத்துசாமி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவி ரேவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் கல்பாக்கம் அணு மின் நிலைய விஞ்ஞானி ஜேசன், ஒன்றிய அரசு கள அலுவலர் எழிலரசன் பங்கேற்று பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர். இதனைத் தொடர்ந்து கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கும், விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் ஒன்றியக்குழு துணைத் தலைவர் மாலதி குணசேகரன், டி.ஜே.எஸ்.தமிழரசன் ஆக்யோர் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி வாழ்த்தினர். இந்த ஆண்டு விழாவிற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் சஞ்சய் காந்தி, பள்ளி ஆசிரியர்கள் ஜோதி, மவுண்ட் பாட்டன், ஹேமாவதி, மாதவி உள்ளிட்டோர் செய்தனர்.

The post கும்மிடிப்பூண்டி அருகே ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: