தமிழ்நாட்டில் மேலும் 10 பெண்கள் விடுதிகள் தோழி விடுதியாக தரம் உயர்கிறது

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 10 பெண்கள் தங்கும் விடுதிகள் ‘தோழி விடுதிகளாக’ தரம் உயர்த்தப்பட உள்ளன. தமிழ்நாடு அரசு பெண்களின் முன்னேற்றத்திற்காக நகரங்களில் தங்கி பணிபுரியும் பெண்களுக்கு குறைந்த கட்டணத்தில் நவீன வசதிகளுடன் கூடிய தங்கும் விடுதிகள் தோழி என்ற பெயரில் திறந்துள்ளது. 1980ல் தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்ட 21 பணிபுரியும் மகளிர் விடுதிகளில் 11 விடுதிகளை தோழி விடுதிகளாக மாற்றப்பட்டு சிறப்பாக செயலாற்றி வருகிறது.

சென்னை, செங்கல்பட்டு உட்பட 9 மாவட்டங்களில் இவை செயல்பட்டு வருகின்றன. விடுதிகளில் தங்க பெண்கள் https://www.tnwwhcl.in/ இணைய தளத்தின் மூலமாக ஆன்லைன் புக்கிங் செய்துகொள்ளலாம். மீதமுள்ள 10 விடுதிகளும் தோழி விடுதிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளது. இவற்றில் சிசிடிவி வசதி, கை ரேகையில் இயங்கும் கதவுகள், 24 மணி நேரம் பாதுகாப்பு வசதி, வாஷிங் மெஷின், ஆர்.ஓ. முறையில் குடிநீர், ஏசி, இலவச வைஃபை, பார்க்கிங் என சகல வசதிகளும் செய்யப்படுகிறது.

The post தமிழ்நாட்டில் மேலும் 10 பெண்கள் விடுதிகள் தோழி விடுதியாக தரம் உயர்கிறது appeared first on Dinakaran.

Related Stories: