டிவி விளம்பரத்தில் வருவதுபோல் தேர்தல் வரும்போதுதான் பாஜ சீன் போடுது…. நார் நாராக கிழித்த நத்தம் விஸ்வநாதன்

திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நேற்று அதிமுக கிழக்கு, மேற்கு மாவட்டம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், நத்தம் விஸ்வநாதன் பேசுகையில், ‘‘நாடாளுமன்ற தேர்தலில் பாஜவை தோற்கடிக்க வேண்டும். தேர்தல் வரும்போது தான் பாஜ சீன் காட்டுகிறார்கள். ரிட்டையர்ட் ஆன அரசியல்வாதிகள் எங்கே இருக்கிறார்கள் என பார்த்து பார்த்து ஒவ்வொரு வீடாக சென்று பிள்ளை பிடிப்பவர்கள் போன்று பிடித்து வருகிறார்கள். டிவி விளம்பரத்தில் வரும் வசனத்தை போல் நாங்கள் வளர்ந்திட்டோம் மம்மி போல் தமிழகத்தில் நாங்கள் வளர்ந்து விட்டோம் என பாஜ ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அத்தனையும் பொய்.

நடக்க முடியாமல் இருந்த அரசியல்வாதிகளை தட்டி எழுப்பி வா வா என்று கட்சியில் சேர்த்து விளம்பர அரசியல் நடத்துகிறார்கள். இதெல்லாம் கதைக்கு ஆகாது. தமிழ்நாட்டுக்காரர்களை பற்றி பாஜவுக்கு புரியவில்லை. இவர்கள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் புரிந்து கொள்வார்கள். தமிழ்நாட்டு மக்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வட இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கட்சியை புறம் தள்ளுவார்கள்’’ என்றார்.

The post டிவி விளம்பரத்தில் வருவதுபோல் தேர்தல் வரும்போதுதான் பாஜ சீன் போடுது…. நார் நாராக கிழித்த நத்தம் விஸ்வநாதன் appeared first on Dinakaran.

Related Stories: