பிளஸ்1 தேர்வு நேற்று தொடக்கம் காஞ்சியில் 14,126 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்

காஞ்சிபுரம்: தமிழகம் முழுவதும் பிளஸ் 1 தேர்வுகள் நேற்று தொடங்கியது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், 6734 மாணவர்கள், 7392 மாணவிகள் என மொத்தம் 14,126 பேர் தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்வை நடத்துவதற்கு தமிழக அரசு தேர்வுகள் துறை சார்பில், அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுயுள்ளன. மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில் 100 பறக்கும் படைகளும், கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 3 வினாத்தாள் கட்டு காப்பு மையங்கள், 3 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள்,4 கூடுதல் வினாத்தாள் கட்டு காப்பாளர்கள், 54 தேர்வு மையங்கள், 54 முதன்மை கண்காணிப்பாளர்கள் 2 கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள், 54 துறை அலுவலர்கள் 5 கூடுதல் துறை அலுவலர்கள், 12 வழித்தட அலுவலர்கள், 800 அறை கண்காணிப்பாளர்கள், 145 சொல்வதை எழுதுபவர்களுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், தேர்வு மையங்களுக்கு குடிநீர்வசதி, மின்சார வசதி தங்கு தடையின்றி கிடைக்க வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து வரும் 26ம்தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகின்றது. பள்ளிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பொதுத்தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கவும், விதிமுறைகளை மீறும் மாணவ, மாணவிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பிளஸ்1 தேர்வு நேற்று தொடக்கம் காஞ்சியில் 14,126 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர் appeared first on Dinakaran.

Related Stories: