மகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தந்தை கைது

தண்டையார்பேட்டை: மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தையை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.  பழைய வண்ணாரப்பேட்டை கோதண்டராமன் தெருவை சேர்ந்தவர் நாராயணன் (47). டீ மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவரது மகள் கொத்தவால்சாவடியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாமாண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் நாராயணன், தனது மகள் 11ம் வகுப்பு படிக்கும்போது பாலியல் தொந்தரவு கொடுத்து, இதனை வெளியே சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார். மேலும், கடந்த 1ம் தேதி மகளை பாலியல் உறவுகொள்ள கட்டாயப்படுத்தியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த சிறுமி, இதுகுறித்து வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார், மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை நாராயணனை போக்சோ சட்டத்தில் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post மகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தந்தை கைது appeared first on Dinakaran.

Related Stories: