பிரபல ஜவுளிக்கடையின் பெண் ஊழியரிடம் ரூ.22 ஆயிரம் பறிப்பு: திருநங்கைகளிடம் விசாரணை

சென்னை: பாண்டி பஜார் தாமஸ் சாலையை சேர்ந்தவர் சுபா (28). பாண்டி பஜாரில் உள்ள பிரபல ஜவுளிக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும், தனது சம்பள பணம் ரூ.22 ஆயிரத்துடன் தியாகராயா சாலை வழியாக தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 2 திருநங்கைகள் சுபாவை வழிமறித்து மிரட்டி அவர் வைத்திருந்த சம்பள பணம் ரூ.22 ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பினர்.

இதுகுறித்து பாண்டி பஜார் காவல் நிலையத்தில் சுபா புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். அதில், வழிப்பறி செய்தது திரிஷா மற்றும் ரித்திகா என்ற திருநங்கைகள் என தெரியவந்தது. உடனே போலீசார் 2 திருநங்கைகளை பிடித்து அவர்களிடம் இருந்து ரூ.22 ஆயிரத்தை மீட்டனர். அவர்கள் வேறு ஏதாவது வழிப்பறியில் ஈடுபட்டனரா என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பிரபல ஜவுளிக்கடையின் பெண் ஊழியரிடம் ரூ.22 ஆயிரம் பறிப்பு: திருநங்கைகளிடம் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: