சிங்கபொருமாள் கோயில் அருகே பெண் உதவி கணக்காளரிடம் தாலி செயின் பறிப்பு: இரு முகமூடி ஆசாமிகளுக்கு வலை

செங்கல்பட்டு: சிங்கபெருமாள் கோவில் அடுத்த கருநிலம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி வெண்ணிலா (32). இவர், தாம்பரத்தில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் உதவி கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை இவர் பணி முடிந்து கருநிலம் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, கருநிலம் பத்மாவதி நகர் அருகில் சென்றபோது எதிரே முகக்கவசம் அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் வெண்ணிலாவின் இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்துள்ளனர்.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த வெண்ணிலா கழுத்தில் அணிந்திருந்த தாலி, தங்க காசுகள் உள்பட 10 சவரன் தங்கத்தாலி சரடு மற்றும் 2 சவரன் தங்க செயின் உள்பட 12 சவரன் தங்க நகைகளை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த வெண்ணிலாவின் இடது கை முறிவு ஏற்பட்டது. இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post சிங்கபொருமாள் கோயில் அருகே பெண் உதவி கணக்காளரிடம் தாலி செயின் பறிப்பு: இரு முகமூடி ஆசாமிகளுக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: