மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வு தொடக்கம் தமிழ் தேர்வில் 471 பேர் ஆப்சென்ட்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், 2023-24ம் கல்வியாண்டிற்கான பிளஸ் 1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. திருவள்ளூர் வருவாய் மாவட்டத்தில், 105 மையங்களில், 29,375 பேர் தேர்வு எழுத கல்வித்துறையினரால் அனுமதிக்கப்பட்டனர். அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வினாத்தாள்கள், 5 மையங்களில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களுக்கு, 24 மணி நேரமும் போலீசார் சுழற்சி அடிப்படையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்வு அறையில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில், 80 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் மாவட்டம் முழுவதும் தேர்வு எழுதும் பள்ளிகளுக்கு நேரில் சென்று திடீர் சோதனை நடத்தி பிட் எழுதுபவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

முதல் நாள் தமிழ் தேர்வில், 29,375 மாணவர்களில் 28,896 மாணவர்கள் 105 தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர். இதில் 471 மாணவர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. இந்தநிலையில், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம் பாடியநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தை கலெக்டர் த.பிரபு சங்கர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த பொதுத் தேர்வுகளுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் 5 வினாத்தாள்கள் கட்டுக்காப்பு மையங்களிலிருந்து 27 வழித்தட அலுவலர்கள், ஆயுதம் தாங்கிய காவலர்கள் உதவியுடன் வாகனம் மூலம் அனைத்து தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்களை பாதுகாப்பாக ஒப்படைத்து வருகின்றனர்.

The post மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வு தொடக்கம் தமிழ் தேர்வில் 471 பேர் ஆப்சென்ட் appeared first on Dinakaran.

Related Stories: