கதிர்வேடு பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பில் விளையாட்டுத் திடல் அரங்கம்

புழல்: புழல் கதிர்வேடு பகுதியில் எம்பி மேம்பாட்டு நிதியிலிருந்து விளையாட்டு பார்வையாளர் அரங்கம் கட்டுவதற்காக பூமி பூஜை நடத்தப்பட்டது. மாதவரம் மண்டலம் 31வது வார்டு புழல் அடுத்த கதிர்வேடு அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் மாநகராட்சிக்குச் சொந்தமான கால்பந்து விளையாட்டு திடல் உள்ளது. இந்த விளையாட்டு திடலுக்கு பார்வையாளர் அரங்கம் அமைத்துத் தருமாறு மாநகராட்சி கவுன்சிலர் சங்கீதா பாபு திருவள்ளூர் எம்பி ஜெயக்குமாருக்கு கோரிக்கை வைத்தார். இதனை ஏற்ற அவர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் விளையாட்டு திடலில் பார்வையாளர் அரங்கம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்தார்.

இதற்கான பூமி பூஜை நேற்று வார்டு கவுன்சிலர் சங்கீதா பாபு தலைமையில் நேற்று நடந்தது. இந்த பூமி பூஜையில் மாதவரம் மண்டல செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவி செயற்பொறியாளர் ஜெயலட்சுமி, உதவி பொறியாளர் முகமது ஆஷிக், சமூக ஆர்வலர் கதிர்வேடு பாபு, கதிர்வேடு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்து மகேஸ்வரி, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பார்வதி, தூய்மைப் பணி ஆய்வாளர் சபி, மாநகராட்சி ஊழியர்கள், கால்பந்து விளையாட்டு வீரர்கள், மாநகராட்சி ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கதிர்வேடு பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பில் விளையாட்டுத் திடல் அரங்கம் appeared first on Dinakaran.

Related Stories: