ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தோல்வி உறுதி: பிரசாந்த் கிஷோர் சொல்கிறார்

திருப்பதி: ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தோல்வியடைவது உறுதி என்று பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கூறினார். இதுகுறித்து அவர் ஐதராபாத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வரும் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மிகப்பெரிய தோல்வியை சந்திப்பார். ஆந்திராவில் படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக அலைந்து திரிகின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக அனைத்து வளங்களையும் ஒரு சில பிரச்னைகளுக்காக செலவழித்து வளர்ச்சியை புறக்கணித்து ஜெகன்மோகன் ரெட்டி பெரிய தவறு செய்துவிட்டார். அவரது தற்போதைய நிலையை பார்க்கும்போது மீண்டும் ஆட்சிக்கு வருவது சாத்தியமில்லை. ஆட்சியாளர்கள், மக்களை சந்திக்க கூடியவர்களாக இருக்க வேண்டும்.

அது இல்லாமல் அரண்மனைகளில் தங்கி மக்கள் நலனில் அக்கறை காட்டுவதாக நினைக்கிறார்கள். இந்த மாதிரியான அணுகுமுறையால் மக்கள் மகிழ்ச்சியடைய மாட்டார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் சிறந்த பாத்திரமாக விளங்க வேண்டும். ஆனால் பல தலைவர்கள், தங்களை பொதுமக்களுக்கு சலுகைகளை வழங்குபவர்களாகவே பார்க்கின்றனர். அப்படிப்பட்டவர்கள் தேர்தலில் பெரும் விலை கொடுக்க வேண்டியது வரும். தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தொடர்ந்து வெற்றி பெற முடியாது. பொதுமக்கள் மாறி மாறி வாக்களிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

The post ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தோல்வி உறுதி: பிரசாந்த் கிஷோர் சொல்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: