பாஜக மாநில மையக்குழு கூட்டம்: தொகுதிப் பங்கீடு, தேர்தல் வியூகம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை!

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக சென்னையில் பா.ஜ.க. மைய குழு நடத்தி நடைபெற்று வருகிறது. மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணியை இறுதி செய்யும் வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை நடத்தி வருகிறது. அதே போல அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பாஜக கூட்டணியில் இணைந்த முதல் கட்சியாக தமாகா உள்ளது. தொடர்ந்து மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இதனிடையே சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக சென்னையில் பா.ஜ.க. மைய குழு ஆலோசனை நடத்தி வருகிறது. எல்.முருகன், அண்ணாமலை, தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, நயினார் நாகேந்திரன், வானதி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் வேட்பாளர் பட்டியல் குறித்தும் ஆலோசனை நடைபெறுகிறது.

The post பாஜக மாநில மையக்குழு கூட்டம்: தொகுதிப் பங்கீடு, தேர்தல் வியூகம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை! appeared first on Dinakaran.

Related Stories: