நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பேசுவதற்கு உறுப்பினர்கள் லஞ்சம் வாங்கினால் குற்றம்தான்: உச்சநீதிமன்றம் அதிரடி

டெல்லி: சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் லஞ்சம் வாங்கும் உறுப்பினர்கள் விசாரணையில் இருந்து விலக்கு கோர முடியாது என உத்தரவிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் வாக்களிக்க லஞ்சம் பெறுவதும், லஞ்சம் அளிக்கும் உறுப்பினர்களையும் அவர்களது பேச்சு குறித்து விசாரிக்க அரசியல் சாசன அமர்வு விலக்கு அளித்துள்ளது என நரசிம்ம ராவ் சிபிஐ வழக்கில் உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த 1998ம் ஆண்டு ஒரு தீர்ப்பை வழங்கியது.

இந்நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோத்தா கட்சியின் எம்.எல்.ஏ. சீதா சோரலின் மனுவை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.எஸ்.போப்பண்ணா, எம்.எம்.சுந்தரேஷ், பி.எஸ்.நரசிம்மா, ஜே.பி.பர்திவாலா, சஞ்சய் குமார், மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து இந்த தீர்ப்பின் தேதி குறிப்பிடாமல் கடந்த 5ம் தேதி தள்ளிவைத்தது. அதில் குறிப்பாக இந்த தீர்ப்பு உண்மையிலேயே விசாரணைக்கு ஏற்புடையதா? என்ற விஷயத்தை அவர்கள் தெரிவித்த போது இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது.

குறிப்பாக சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் லஞ்சம் வாங்கும் உறுப்பினர்கள் விசாரணையில் இருந்து விலக்கு கோர முடியாது என்றும் நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் வாக்களிக்க லஞ்சம் வாங்குவது, பொது வாழ்க்கையில் நேர்மையை சீர்குலைப்பதாகும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. விலக்கு அளித்து 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பு முரணாக உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பேச, வாக்களிக்க லஞ்சம் வாங்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

The post நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பேசுவதற்கு உறுப்பினர்கள் லஞ்சம் வாங்கினால் குற்றம்தான்: உச்சநீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: