அரசு போக்குவரத்து கழகங்கள் 17 தேசிய விருதுக்கு தேர்வு: அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிக்கை:
அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு ஆண்டுதோறும் போக்குவரத்துக் கழகங்களை ஊக்குவிக்கும் வண்ணம் அவற்றின் செயல்திறன்களை ஆய்வு செய்து விருதுகள் வழங்கி வருகிறது. அதன்படி 2022-23ம் ஆண்டிற்கான தேசிய பொது பேருந்து போக்குவரத்து சிறப்பு விருதுகளில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் 17 விருதுகளுக்கு தேர்வாகியுள்ளது. முதல் பரிசுக்கான 38 பிரிவுகளில் 9 பிரிவுகளிலும், இரண்டாம் பரிசுக்கான 31 பிரிவுகளில் 8 பிரிவுகளிலும் ஆக மொத்தம் 69ல் 17 பிரிவுகளில் பரிசு பெறுவதற்கு தேர்வாகியுள்ளது. இது மொத்த விருதுகளில் 4ல் ஒரு பங்கு ஆகும்.

இதன்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட் 6 விருதுகள் பெற்றிட தேர்வாகியுள்ளது. இதேபோல தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட் 5 விருதுகள் பெற்றிட தேர்வாகியுள்ளது.

வாகன பயன்பாட்டிற்காகவும், பணியாளர் செயல் திறனுக்காகவும் முதல் இடத்திற்கும், பேருந்துகளில் டிஜிட்டல் பரிவர்த்தனைக்காக இரண்டாவது இடத்திற்கும்,அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் 3 விருதுகள் பெற்றிட தேர்வாகியுள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (சேலம்) 2 விருதுகள் பெற்றிட தேர்வாகியுள்ளது. ஏஎஸ்ஆர்டியூ தள்ளுபடி விலையில் அதிக பொருட்கள் கொள்முதல் செய்ததற்காக முதல் இடத்திற்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிமிடெட் ஒரு விருது பெற்றிட தேர்வாகியுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post அரசு போக்குவரத்து கழகங்கள் 17 தேசிய விருதுக்கு தேர்வு: அமைச்சர் சிவசங்கர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: