உசிலம்பட்டியில் பள்ளியில் முப்பெரும் விழா

உசிலம்பட்டி, மார்ச் 3: உசிலம்பட்டி நகராட்சியில் உள்ள அரசு உதவி பெறும் நாடார் சரஸ்வதி தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா முப்பெரும் விழாவாக நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சு, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.இந்த விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் மதன்பிரபு தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சீமானூத்து ஊராட்சி மன்ற தலைவரும், திமுக வடக்கு ஒன்றிய செயலாளருமான அஜித்பாண்டி பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர் பிரகதீஸ்வரன், டாக்டர்கள் விஜயபாண்டியன், ராதாமனி, தொழிலதிபர் நிஜாமுதீன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

The post உசிலம்பட்டியில் பள்ளியில் முப்பெரும் விழா appeared first on Dinakaran.

Related Stories: